வெந்தய களி(Vendhaya Kali)

உடல் வெப்பத்தை குறைக்கும் வெந்தய களி செய்வது எப்படி?

தேவையானவை:

  • வெந்தயம் - 1/2 கிலோ,
  • பச்சரிசி மாவு - 200 கிராம்,
  • வெல்லம் (அ) கருப்பட்டி - 100 கிராம்,
  • சுக்குதூள் - 1/2 தேக்கரண்டி,
  • ஏலக்காய் - 2 (தூளாக),
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:

  • ஏலக்காய், வெல்லம் (அ) கருப்பட்டியை தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்,
  • பின்னர், வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தூளாக்கவும்,
  • அரிசி மாவில், வெந்தய மாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்,
  • பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டி எடுக்கவும்,
  • கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும்,
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்,
  • வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை கலந்து கிளறவேண்டும்,
  • மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும்,
  •  தண்ணீரில் விரலை விட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது,
  • இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்,
  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தய களி தயார்.

நன்மைகள்:

  • வாய் புண் இருந்தால் விரைவில் குணமடையும்,
  • சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவுகிறது,
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,
  • உடல் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது,
  • பெண்கள் பருவமடைந்த புதிதில் வெப்பத்தை குறைத்து உடல் மெலிந்து போவதை தடுக்கிறது.