நெய் சோறு(அ)நெய் சாதம்(Ghee Rice)

குழந்தைகளுக்கான நெய் சோறு செய்வது எப்படி?

தேவையானவை:

  • பொன்னி அரிசி – 1.5 கப்,
  • நெய் - 100 கிராம்,
  • பட்டை - 3 எண்,
  • கிராம்பு - 4 எண்,
  • ஏலக்காய்- 2 எண்,
  • பூண்டு - 7 எண்(உரித்தது),
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • முந்திரி - 10 எண்.

செய்முறை:

  • அரிசியை கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்,
  • பூண்டு மற்றும் ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்,
  • பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பூண்டு,கறிவேப்பிலை மற்றும் முந்திரி போட்டு தாளிக்கவும்,
  • அதன் பின் அரிசியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்,
  • விசில் போடாமல் மிதமான தீயில் வேக வைத்து சாதம் குழையும் முன் இறக்கவும்,
  • இப்பொழுது குழந்தைகளுக்கான நெய் சாதம் தயார்.

நன்மைகள்:

  • நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,
  • இருமல் மற்றும் சளியை தடுக்க உதவுகிறது,
  • வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது,