புளி சாதம்(அ)புளியோதரை(Tamarind Rice)

சுவையான புளி சாதம்(அ)புளியோதரை செய்வது எப்படி?

தேவையானவை:

  • உதிரியாக சாதம் - தேவையான அளவு.

புளி சாத பொடி தயாரிக்க:

  • கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி,
  • வெந்தய விதை - 1 தேக்கரண்டி,
  • மிளகாய் வத்தல் - 4 எண்,
  • எள் விதை - 3 தேக்கரண்டி,
  • மிளகு - 2 தேக்கரண்டி.

புளி கரைசல் தயாரிக்க:

  • நல்லெண்னை - 1/2 கப்,
  • கடுகு - 1 தேக்கரண்டி,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • மிளகாய் வத்தல் - 5 எண்,
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • வேர்கடலை - 1/2 கப்,
  • கடலை பருப்பு - 1/4 கப்,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • புளி - பெரிய எலுமிச்சை அளவு.

செய்முறை:

புளி சாத பொடி:

  • மேற்குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் நல்ல பொன் நிறமாக வறுத்து கொள்ளவும்,
  • வறுத்த பின்னர் அதை காற்றோட்டமாக வைத்து ஆற வைக்கவும்,
  • பின்னர் இதனை பொடிய்யாக்கி கொள்ளவும்.

புளி கரைசல்:

  • முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து,கரைத்து வடிக்கட்டவும்,
  • பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி கடுகு,சீரகம்,வெந்தயம்,வேர்கடலை,கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்,
  • பிறகு வடிகட்டிய புளியை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்,
  • சேர்த்தவுடன்,அடுப்பை மிதமான தீயில் வைத்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்,
  • இப்போது புளி கரைசல் தயார்.

புளி சாதம்:

  • அதன் பின்,புளி கரைசலை எடுத்து,சாதத்தில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைக்கவும்,
  • ஐந்து நிமிடத்திற்கு பின் சுவையான புளி சாதம் சாப்பிட ரெடி.

நன்மைகள்:

  • ஆக்ஸிஜனேற்றதிற்கு உதவுகிறது,
  • இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது,
  • உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.