மனம் மணக்கும் தக்காளி சாதம் செய்வது எப்படி?
தேவையானவை:
- உதிரியாக சாதம் - தேவையான அளவு,
- தக்காளி - 5 பழம்,
- வெங்காயம் - 3 எண்,
- பச்சை மிளகாய் - 3 எண்,
- கடுகு - 2 தேக்கரண்டி,
- இஞ்சி பூண்டு பசை - 1 தேக்கரண்டி,
- கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி,
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
- சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி,
- ஏலக்காய் - 2 தேக்கரண்டி,
- கிராம்பு - 3 தேக்கரண்டி,
- பட்டை - 2 துண்டு,
- புதினா இலை - 1/2 கட்டு,
- கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- எண்ணெய் - தேவையான அளவு,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்,
- பின்பு பச்சை மிளகாயை நீளமாக கீறவும்,
- கொத்தமல்லி மற்றும் புதினாவை நீரில் கழுவி,அதன் இலைகளை சிறிதாக நறுக்கவும்,
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணையை காய விடவும்,
- காய்ந்த எண்ணையில் கடுகு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு பசை,சோம்புத் தூள் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து தாளிக்கவும்,
- பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்,
- வதங்கிய பின் கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்,
- பின்னர் இதை சாதத்துடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி விடவும்,
- இப்பொழுது மனம் மணக்கும் தக்காளி சாதம் தயார்.
நன்மைகள்:
- மூளை திறனை அதிகரிக்கிறது,
- நோயெதிற்ப்பு முறையை பராமரிக்கிறது,
- நீர் சத்தை அதிகரிக்கிறது.