உளுந்தங்களி(Ulunthu kali)

உடலை வலிமைப்படுத்தும் உளுந்தங்களி செய்வது எப்படி?

தேவையானவை:

  • உளுந்து - 1/2 கிலோ,
  • பச்சரிசி - 150 கிராம்,
  • கருப்பட்டி - 3/4 கிலோ,
  • நல்லெண்ணெய் - 100 மில்லி.

செய்முறை:

  • உளுந்தை நன்கு வறுத்து, அதனுடன் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்,
  • கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சிய பின்னர், பாகின் அடியில் தங்கும் அசடுகளை அரித்துவிட வேண்டும்,
  • பின்னர் காய்ச்சிய கருப்பட்டி பாகுவில், மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி கிளற வேண்டும்,
  • பின் நல்லெண்ணைய் ஊற்றி சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கினால் உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தங்களி தயார்

நன்மைகள்:

  • இரத்த அலுத்தத்தை குறைக்கிறது,
  • நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது,
  • பெண்களின் இடுப்பு எலும்பை வலிமை படுத்துகிறது,
  • பெண்களின் முதல் மாதவிடாயின் போது வலி அதிகம் ஏற்பட்டால் இது கொடுக்கப்படுகிறது.