தேங்காய் சாதம்(Coconut Rice)

குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • உதிரியாக சாதம் - 2 கப்,
  • தேங்காய் - துருவியது 1/2 கப்,
  • கடுகு - 1 தேக்கரண்டி,
  • கடலை பருப்பு - 2 தேக்கரண்டி,
  • முந்திரி - 1/4 கப்,
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
  • மிளகாய் வத்தல் - 4 எண்,
  • பெருங்காய தூள் - சிறிதளவு,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • உப்பு - தேவையான அளவு,
  • தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி கடுகு,கடலை பருப்பு,முந்திரி,உளுத்தம் பருப்பு,மிளகாய் வத்தல் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்,
  • பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பை சேர்த்து பொன் நிறமாக மாறும் வரும் வரை வதக்கவும்,
  • கலவை பொன் நிறமாக வரும் வேளையில் சாதத்தை சிறிது சிறிதாக கொட்டி நன்கு கிளறி விடவும்,
  • ஒரே சீராக கலவை சாதத்தில் சேர்ந்தவுடன் இறக்கவும்,
  • இப்போது குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் ரெடி.

நன்மைகள்:

  • எளிதில் ஜீரணமாகிறது,
  • இரத்த அலுத்தத்தை கட்டுபடுத்துகிறது,
  • உடலில் கொலுப்பு குறைய உதவுகிறது,
  • உடலில் உள்ள நச்சு தன்மயை குறைக்கிறது.