சுவை மிகுந்த பால் தயிர் சாதம் செய்வது எப்படி?
தேவையானவை:
- அரிசி - 1 கப்,
- பால் - 6 கப்,
- பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி,
- கொத்தமல்லி தழை - சிறிதளவு,
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- தயிர் - 1/2 கப்,
- உப்பு - தேவையான அளவு,
- கடுகு - 1 தேக்கரண்டி,
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
- மிளகாய் - 5 எண்(நறுக்கியது),
- முந்திரி பருப்பு - 8 எண்,
- உலர் திராட்சை - 10 எண்,
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பாலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்,
- பின்னர் அரிசியை கழுவி அதில் சேர்த்து நன்கு வேக விடவும்,
- நன்கு வெந்த பின்னர் பெருங்காயத்தை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்,
- அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,முந்திரி பருப்பு,உலர் திராட்சை,மிளகாய்,கறிவேப்பிலை,தயிர் மற்றும் உப்பை சேர்த்து தாளித்து இறக்கவும்,
- பின்னர் சாதத்துடன் இறக்கி வைக்கபட்டுள்ள கலவை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு கிளறி ஆற விடவும்,
- ஆறிய பின்னர் சுவை மிகுந்த பால் தயிர் சாதம் சாப்பிட தயார்.
நன்மைகள்:
- செரிமானத்திற்கு உதவுகிறது,
- உடல் வெப்பத்தை குறைக்கிறது,
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது,
- உடல் எடையை குறைக்கிறது,
- மன அழுத்தத்தை குறைக்கிறது.