எலுமிச்சை சாதம்(Lemon Rice)

சுவையான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • சாதம்(பாஸ்மதி அரிசி) - 2 கப்,
  • எலுமிச்சை சாறு - 2 பழம்,
  • வேர்க்கடலை - 1/2 கப்,
  • கடலை பருப்பு - 1/4 கப்,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • இஞ்சி - சிறு சிறு துண்டுகளாக,
  • மிளகாய் வத்தல் -4 நீளமாக,
  • சமையல் எண்ணெய் - தேவையான அளவு,
  • கடுகு - 2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • கொத்தமல்லி தழை -சிறிதளவு,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • ஒரு கடாயில் எண்ணையெய் சூடாக்கி அதில் கடுகு,வேர்க்கடலை,கடலை பருப்பு,இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்,
  • பின்பு எலுமிச்சை சாறு,மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விடவும்,
  • பின்னர் இதை சாதத்தில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும்,
  • கிளறி விட்ட சாதத்தின் மேல் கொத்தமல்லி தழையை பரப்பி மூடி வைத்து விட வேண்டும்,
  • பத்து நிமிடத்திற்கு பின் சுவையான எலுமிச்சை சாதம் சாப்பிட தயார்.

நன்மைகள்:

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,
  • வயிற்றை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது,
  • இரத்தத்தை சுத்தப்படுத்தி அஜீரண பிரச்சனையை சரி செய்கிறது.