உளுந்தஞ்சோறு(அ)உளுந்து சாதம்(Ulunthu Soru)

சத்தான உளுந்து சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • அரிசி - 1 கப்,
  • உளுந்து - 1.5 கப்,
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி,
  • கடுகு - 1 தேக்கரண்டி,
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி,
  • இஞ்சி - 3 தேக்கரண்டி(சிறிதாக நறுக்கியது),
  • மிளகாய் வத்தல் - 4 எண்,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • பூண்டு - 15 எண்(உரித்தது),
  • தேங்காய் - 1 கப் துருவியது,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • உளுந்து மற்றும் அரிசியை கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்,
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன்,கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம்,மிளகாய் வத்தல்,கறிவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்,
  • பின்னர் அதில் தண்ணீரை கலக்கவும்,
  • அதன் பிறகு அரிசி,உளுந்து,துருவிய தேங்காய் மற்றும் உப்பை சேர்த்து வேக விடவும்,
  • நல்ல பதமாக வெந்த பின்னர் இறக்கவும்,சத்தான உளுந்து சாதம் சாப்பிட தயார்.

நன்மைகள்:

  • உடல் சுறு சுறுப்பாக இருக்க உதவுகிறது,
  • எளிதில் செரிமானமாகிறது,
  • எலும்பை வலுப்படுத்துகிறது,
  • கொலுப்பை குறைக்க உதவுகிறது.