பருப்பு சாதம்(அ)பருப்பு சோறு(Dal Rice)

அனைவருக்கும் பிடித்த பருப்பு சாதம் செய்வது எப்படி?

தேவையானவை:

  • அரிசி - 1 கப்,
  • பருப்பு - 1/2 கப்,
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி,
  • நெய் - 1 தேக்கரண்டி,
  • கடுகு - 1 தேக்கரண்டி,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • மிளகாய் வத்தல் - 2 எண்,
  • காயா போடி - 1/4 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • வெங்காயம் - 1 எண்(நறுக்கியது),
  • பூண்டு - 10 எண்(உரித்தது),
  • தக்காளி - 1 எண்(நறுக்கியது),
  • உப்பு - தேவையான அளவு,
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
  • தண்ணீர் - 4 கப்,
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு(நறுக்கியது).

செய்முறை:

  • அரிசி மற்றும் பருப்பை களுவி வைத்து கொள்ளவும்,
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு,சீரகம்,மிளகாய் வத்தல்,கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்,
  • பின்பு அதில் தண்ணீர் சேர்த்து அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்,
  • அதன் பின் நெய்,காயப் பொடி,மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து அரிசி பதமாக வெந்த பின்னர் இறக்கவும்,
  • இப்போது அனைவருக்கும் பிடித்த பருப்பு சாதம் தயார்.

நன்மைகள்:

  • மலச்சிக்கலை தடுக்கிறது,
  • மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது,
  • உடலுக்கு சக்தியை தருகிறது.