கேப்பை களி(அ)ராகி களி(Keppai Kali(or)Ragi Kali)

சோர்வை போக்கும் கேப்பை களி(அ)ராகி களி செய்வது எப்படி?

தேவையானவை:

  • ராகி மாவு - 1 கப்,
  • சாதம் - 1/2 கப்,
  • தண்ணீர் - 2 கப்,
  • உப்பு - தேவையான அளவு,
  • நெய் - தேவையான அளவு.

செய்முறை:

  • ஒரு பாத்திரதில் நீரை கொதிக்க வைத்து அதில் உப்பை சேர்க்கவும்,
  • பின்னர் சாதம் மற்றும் தேவையான அளவு நெய்யை சேர்க்கவும்,
  • அதன் பின்,ராகி மாவை அதனுடன் சேர்த்து நன்றாக இறுகும் வரை வேக விடவும்,
  • சூடு ஆறிய பின்பு உடல் சோர்வை போக்கும் கேப்பை களி(அ)ராகி களி தயார்,
  • இதனை புளி குழம்பு மற்றும் கருவாட்டு குழம்புடன் வைத்து சாப்பிடலாம்.

நன்மைகள்:

  • எடையை குறைக்க உதவுகிறது,
  • எலும்புகளை வலுவாக்குகிறது,
  • சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது,
  • கொழுப்பை குறைக்கிறது,
  • இரத்த அலுத்தத்தை கட்டுபடுத்துகிறது.