உடல் சக்தியை அதிகாரிக்கும் கம்பு களி(அ)கம்பு கூழ் செய்வது எப்படி?
தேவையானவை:
- அரிசி - 1/2 கிலோ
- கம்பு மாவு - 1 கிலோ
- தண்ணீர்-தேவையான அளவு
- உப்பு-தேவையான அளவு
செய்முறை:
- வழக்கம் போல் அரிசியை வேக விடவும்,
- வேகும் பதத்திற்கு வரும் பொழுது கம்பு மாவை சேர்க்கவும்,
- நன்கு கெட்டியான பின்பு அடுப்பில் இருந்து இறக்கவும்,
- சூடு ஆறிய பின்பு உடலுக்கு சக்தி தரும் கம்பு களி சாப்பிட தயார்,
- இதனை கருவாட்டு குழம்போடு வைத்து சாப்பிடலாம்,
- நன்கு கூழ் போல் கரைத்தும் குடிக்கலாம்.
நன்மைகள்:
- கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது,
- உடல் எடையை குறைக்க உதவுகிறது,
- உடல் சோர்வைடையாமல் இருக்க உதவுகிறது,
- உடல் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.